search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்திரிகையாளர் கசோக்கி"

    சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி அதிகாரிகளால் திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டதாக ஐநா வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. #JamalKhashoggi #MohammedBinSalman #UN
    நியூயார்க்:

    சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணை தூதரகத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி, சென்றபோது படுகொலை செய்யப்பட்டார். இதில் சவுதி அரசுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் சவுதி அரசு இதனை மறுக்கிறது.

    இந்த நிலையில் ஜமால் கசோக்கியின் கொலை குறித்து விசாரணை நடத்த ஐ.நா சபையின் சிறப்பு அறிக்கையாளர் ஆக்னஸ் கலாமார்ட், கடந்த மாதம் 28-ந்தேதி துருக்கி சென்றார். அங்கு அவர் கடந்த 3-ந்தேதி வரை பல்வேறு கட்ட விசாரணைகளை நடத்தினார். அதனை தொடர்ந்து தனது விசாரணை குறித்த முதல் அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டார்.



    அந்த அறிக்கையில், “சவுதி அரேபிய அதிகாரிகளால் முன்னதாகவே திட்டமிடப்பட்டு மிருகத்தனமாக ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக குற்றவாளிகள் என்று 11 பேர் கைது செய்யப்பட்டு நடைபெற்று வரும் விசாரணையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை கவலை அளிப்பதாக உள்ளது. இது சம்பந்தப்பட்ட ஆதாரங்களை பெறுவதற்காக, சவுதி அரேபியாவிற்கு அதிகாரப்பூர்வமாக செல்ல அனுமதி கேட்டுள்ளேன். ஜமால் கசோக்கியின் கொலை தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கை வரும் ஜூன் மாதத்தில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலிடம் சமர்ப்பிக்கப்படும்”

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #JamalKhashoggi #MohammedBinSalman #UN
    கசோக்கி கொலையில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள் என சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் கருத்து தெரிவித்துள்ளார். #JamalKhashoggi #MohammedBinSalman
    ரியாத்:

    சவுதி அரேபிய மன்னராட்சியையும், இளவரசர் முகமது பின் சல்மானையும் விமர்சித்து கட்டுரைகள் எழுதி வந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 60), துருக்கியில் சவுதி தூதரகத்தில் கடந்த 2-ந் தேதி மாயமான நிலையில், அவர் அங்கேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல், உலக அரங்கை உலுக்கி உள்ளது.

    இந்த விவகாரத்தில் சவுதி அரேபியா மிக மோசமான முறையில் கசோக்கியை கொலை செய்து மூடி மறைத்து விட்டது என்று அமெரிக்கா கருதுகிறது. அமெரிக்காவின் நட்பு நாடாக சவுதி அரேபியா திகழ்ந்தபோதும் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.



    இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “நடைமுறையில் சவுதி அரேபியாவை ஆளுகிறவர், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்தான். எனவே கசோக்கி மரணத்துக்கு காரணமான நடவடிக்கைக்கு இறுதி பொறுப்பை அவர்தான் ஏற்க வேண்டும்” என்று கூறினார்.

    இது பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு டிரம்ப் கொடுத்த அழுத்தமாக அமைந்துள்ளது.

    இந்த விவகாரத்தில் இதுவரை மவுனம் காத்து வந்த முகமது பின் சல்மான், இப்போது தனது மவுனத்தை கலைத்துக்கொண்டு வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.

    ரியாத்தில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு முகமது பின் சல்மான் இதுபற்றி கூறும்போது, “கசோக்கி கொலையில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள்” என குறிப்பிட்டார். மேலும், “கசோக்கி படுகொலையை தொடர்ந்து எழுந்துள்ள பரபரப்பு, சவுதி அரேபியாவின் சீர்திருத்த நடவடிக்கைகளை தடம் புரளச்செய்து விட முடியாது” எனவும் கூறினார்.  #JamalKhashoggi #MohammedBinSalman 
    துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கசோக்கியின் உடல் பாகங்கள் தூதரக அதிகாரியின் வீட்டு தோட்டத்தில் உள்ள கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. #JamalKhashoggi #SaudiConsulGeneral
    இஸ்தான்புல்:

    அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி வந்த சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 59), துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் தேதி சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து திரும்பவில்லை.

    அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதலில் இதனை மறுத்த சவுதி அரேபியா, பின்னர் தூதரகத்தில் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டதை உறுதி செய்தது. சவுதி மன்னராட்சியையும் பட்டத்து இளவரசரையும் கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கசோக்கி கொல்லப்பட்டது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.



    இந்நிலையில் துருக்கி பாராளுமன்றத்தில் அதிபர் எர்டோகன் நேற்று பேசினார். அப்போது அவர் கசோக்கி படுகொலை திட்டமிட்ட சதி என குற்றம்சாட்டினார்.

    ‘கசோக்கி படுகொலை செய்யப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக, அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை நீக்கி உள்ளனர். சவுதி அரேபிய தூதரகம் அருகேயுள்ள காட்டினை சவுதி அரேபிய ஏஜெண்டுகள் பார்வையிட்டிருக்கிறார்கள். இந்த காட்டில்தான் கசோக்கியின் உடல் வீசப்பட்டிருக்கலாம் என கருதி துருக்கி அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    இது கொடூரமான திட்டமிட்ட படுகொலை. இதை மறைக்க முடியாது. எனவே, கசோக்கி உடல் எங்கு இருக்கிறது? என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சவுதி அரேபியா வெளியிட வேண்டும். இந்த கொலையின் பின்னணியில் உள்ள உண்மைகளை நிச்சயம் வெளிக்கொண்டு வருவோம்’ என்றார் எர்டோகன்.

    இதற்கிடையே கசோக்கியின் உடல் பாகங்கள் சவூதி அரேபிய தூதரக அதிகாரியின் வீட்டில் கிடைத்து இருப்பதாக பிரிட்டன் நாட்டு செய்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.  

    கசோக்கியின் உடல் பாகங்கள் சவுதி தூதரக அதிகாரியின் வீட்டு தோட்டத்தில் உள்ள கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் டோகு பெரின்செக் கூறியதாக துருக்கி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கசோக்கியின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டும், முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக மற்றொரு தகவலும் வெளியாகியிருக்கிறது. #JamalKhashoggi #SaudiConsulGeneral
    ×